பொருட்களை கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

0
191

தற்போது சந்தையில் கிடைக்கும் பொதி செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை வாங்கும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடைகளில் உணவுப் பொருட்களின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதனால் சந்தையில் காலாவதியான உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் சங்கத்தின் செயலாளர் எஸ்.வை.போபிட்டியகே தெரிவித்தார்.

எனவே மக்கள் அவற்றை வாங்கும் போதும் ண்ணும் போதும் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இவற்றை கவனியாது உண்பதால் தேவையற்ற நோய்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here