நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து நாட்டில் உள்ள மருத்துமனைகளில் பாரிய அளவில் சில மருந்து பொட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றன.
இந்நிலையில் மலையகப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றன.இவ்வாறு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த மக்கள் படும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தலைவாக்களை தேயிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் சென்கூம்ஸ் தோட்ட நிர்வாகம் இணைந்து இத்தோட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்ப்பட்ட 150 பேருக்கு முதியோர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவ முகாம் ஒன்று இன்று 29 ம் திகதி தோட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் பணிப்பாளர் கீர்த்தி மோடி தலைமையில் உதவி பணிப்பாளர் டி டி ஏ வித்தானகே ஆகியொரின் தலைமையில் நடைபெற்றன.
குறித்த இலவச மருத்துவ முகாமில் கண் சிகிச்சை,இரத்த பரிசோதனை,குருதி அழுத்தம்,உள்ளிட்ட பல நோய்களுக்காக இதன் போது சிகிச்சை பெற்றுக்கொடுக்கப்பட்டன. தோட்ட முகாமையாளர் எம் கே.டி. பிரியந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமிக்கு இதற்கு கொழும்பிலிருந்து வைத்தியர்கள் வருகை தந்திருந்திருந்ததுடன்.
குறித்த முகாமுக்கான அனுசரனையினை hநடி யபந ளுசi டுயமெய உதவி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்