பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்!

0
49

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோவை சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்நிலையில் டோக்கியோவில் நடைபெறும் இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது.

* உலகில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது.

* இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது.

* இந்தியாவில் இராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

* இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.

* மெட்ரோ ரெயில் உற்பத்தி, ஸ்டார்ட்அப் என ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டொலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here