பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் பல இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!

0
222

கம்பஹா, பியகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றுகாலை பேஸ்புக் ஊடாக நண்பர்களாகியவர்கள் நடத்திய விருந்தில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இளைஞர் குழுவினர் நேற்று முன்தினம் இரவு இந்த இடத்திற்கு வந்து, மறுநாள் காலை வரை விருந்து வைத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞரொருவரிடம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும், ஏனைய குழுவினரிடம் போதைப்பொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, போதைப்பொருளுடன் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய குழுவினர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் இந்த இளைஞர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here