பொலிஸ்மா அதிபரை பதவி நீக்க ஆளுங்கட்சி நடவடிக்கை

0
14

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்குரிய நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

பொலிஸ்மா அதிபர் தாமாக பதவி விலக மறுத்தால், நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அவரை வெளியேற்றுவதற்கு ஆளுங்கட்சி தயாராகி வருகின்றது.

மாத்தறை, வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பின்னர் இது விடயம் தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொலிஸார்மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமானவராக செயல்பட்டுள்ளார் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here