பொலிஸ் உத்தியோகத்தரிடம் சில்மிஷம் செய்தவர் கைது

0
141

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் கண்காணிப்பதற்காக பேருந்தில் ஏறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தவறான முறையில் நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here