திக்கல பகுதியைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த நயனா ரோஷினி என்ற 52 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவினர் நேற்று இரவு அந்த வீட்டை சோதனையிட்டனர்.
சந்தேகத்திற்கிடமான பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் திடீரென சுகவீனமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் குடும்பத்தாரிடம் பொலிஸார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு பணித்துள்ளனர்.
அதன்பின், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




