சிறுத்தையின் நடமாட்டத்தால் அச்சம் கொண்டிருக்கும் போடைஸ் பகுதிக்கு நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் இன்று(05) விஜயம் செய்துள்ளனர்.
கடந்த 03 ஆம் திகதி அதிகாலையில், ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள போர்டைஸ் தோட்டத்தின் எம்.சீ. பிரிவில் இரவில் சுற்றித் திறிந்த சிறுத்தை அப்பகுதியிலுள்ள குடியிருப்பிற்குள் புகுந்து வளர்ப்பு நாயை கடித்து இழுத்துச்செல்ல முற்பட்ட காட்சி சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் தோட்ட மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் ஒவ்வொறு நாளும் இரவு நேரங்களில் வீடுகளுக்கு அருகில் வரும் சிறுத்தை தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள், மற்றும் வளர்க்கும் நாய்களை கடித்து எடுத்துச் செல்வதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் (05 ) நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரி ஆர்.எம்.டி.பி. ரத்நாயக்க மற்றும் அவரது குழுவினர் சம்பவத்தை கண்காணிக்கவும், சிறுத்தைகளிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தோட்டத் தொழிலாளர்களுக்குக் தெளிவுபடுத்தவும் வருகைத்தந்தனர்.
அதிகாரிகள் இன்று அந்தப் பகுதியை ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதி முழுவதும் புலியின் கால்தடங்கள் காணப்பட்டன.
விறகு வெட்டவும் தேயிலை கொழுந்து பறிக்கவும் வெளியே செல்லும்போது நாய்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தோட்டத் தொழிலாளர்களிடம் கூறியுள்ளனர்.
சிறுத்தைகள் குடியிருப்பு பபகுதிகளுக்கு நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சிறுத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் எதிர்காலத்தில் அனைத்து தோட்டங்களையும் உள்ளடக்கியதாக நடத்தப்படும் என்று வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.