போடைஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள் அமைக்க 30 மில்லியன் ரூபா ஒதுக்கிய திகாம்பரம்??

0
212

 

அட்டன் போடேஸ் லயன் பகுதியில் ஏற்பட்ட தீ காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்தமையால் தோட்ட உட்கட்டமைப்பு கிராம அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரமத்தின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாககுழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருப்பது டன் அவர்களுக்கு போடேஸ் மைதானத்தில் தற்காலிக குடியிருப்பு அமைத்து தங்குவதற்கு சுமார் 5இலட்சம் ரூபாய் பெறுமதியான தகரங்களையும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் பணியை தோட்ட முகாமையாளருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் மற்றும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் சிவனேசன் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அட்டன்,டிக்கோயா மற்றும் நோர்வூட் நகரங்களில் நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்க உள்ளதாகவும் இலங்கை செஞ்சிலுவை சங்கமும் நிவாரண பொருட்கள் வழங்க முன்வந்துள்ளனர்.

தற்காலிக குடியிருப்பு அமைக்கும் பணிக்காக இராணுவத்தினர் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என தோட்ட முகாமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here