ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2ஆவது மற்றும் 3வது போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து வீரர்கள் பிரிஸ்பேனுக்கு அருகிலுள்ள நூஸா நகருக்குச் சென்ற அதிக அளவில் மது அருந்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து அணியின் நிர்வாக பணிப்பாளர் ரொபர்ட் கீ விசாரணை நடத்தி இங்கிலாந்து கிரிக்கெட் சபையிடம் அறிக்கை அளிக்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘போட்டிகளுக்கு இடையே ஓய்வாகும் வகையில் வீரர்கள் மது அருந்துவது சாதாரண விடயம் தான். அதேநேரத்தில் அதிக அளவில் மது அருந்துவது ஏற்கக்கூடியதல்ல.
அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை அபத்தமானது என்று நான் நினைக்கிறேன். இதுதொடர்பாக விரைவில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.




