போதை ஊசிக்கு அடிமையாகும் சிறுவர்கள் அதிகரிப்பு: பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
173

வவுனியாவில், அண்மைய சில காலமாக சிறுவர் மத்தியில் போதைப் பயன்பாடுகள் ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது.

குறித்த, இந்நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிசார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வரவேண்டும் . மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால் அவர்களின் எதிர்காலம் சிதைவடைந்துவிடும் எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் மீது அதிக கவனமுடன் செயற்பட வேண்டும் என தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ் . சந்திரகுமார் தெரிவித்துள்ளார் .

இன்றைய நிலைமைகளில் 16 வயதிலிருந்து 22 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர் . அத்துடன் வவுனியாவில் அண்மைய சில காலமாக போதைப் பயன்பாடுகள் ஊசி மூலம் ஏற்றும் செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றன.

இவ்வாறான சிலர் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில்,16 வயதிற்குட்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களே அதிகளிவில் காணப்படுகின்றனர் . எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்தி அவர்கள் எங்கு செல்கின்றார்கள் யாருடன் பழக்கம் வைத்திருக்கின்றார்கள் எவ்வாறான நிலைமைகளில் வீடு வருகின்றார்கள் என்ற தகவல்களை துல்லியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும் .

மாணவர்களுக்கு எவ்வழிகளில் போதை ஊசி வழங்கப்படுகின்றன இதை யார் எங்கிருந்து விநியோகம் செய்யப்படுகின்றன போன்ற விடயங்கள் பொலிசாரால் கண்டறியப்பட வேண்டும்.

இவ்வாறு போதைப் பாயன்பாட்டில் ஈடுபடும் மாணவர்களில் தந்தையை இழந்த மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தந்தை போன்ற குடும்பங்களில் அதிகளவில் காணப்படுகின்றது எனவே இந்நடவடிக்கைகயைத் தடுப்பதற்கு பொலிசார் , சிவில் பாதுகாப்புக்குழுகள் , அரச நிறுவனங்கள் கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இறுக்கமான நடைமுறைகளை மேற்கொள்ள முன்வருமாறு மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here