போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கிறார்! நடிகர் விஜய் மீது பொலிஸில் பரபரப்பு புகார்

0
176

அண்மையில் லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியானது.
நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ’லியோ’.

அண்மையில் லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ என்ற பாடல் வெளியானது.

இந்த பாடல் போதைப்பொருள் பழக்கத்தை ஆதரவிக்கும் வகையிலும், ரவுடியிசனத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் ஒன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here