ஹட்டன் பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தலவாக்கலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 2,111 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து,கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.