பொகவந்தலாவ போபத்ததலாவ வனபகுதியில் இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 24.01.2019. வியாழகிழமை பிற்பகல் வேலையில் இந்த தீ வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
இனந் தெரியாதவர்களால் வைக்கபட்ட தீயினால் போபத்தலாவ வனபகுதி சுமார்
10 ஏக்கருக்கு மேல் ஏறிந்து நாசமாகியு;ள்ளதாக தெரிவிக்கபடுகிறது. வரட்சியான
காலபகுதியின் காரணமாக இனந்தெரியாதவர்களால் வைக்கபடுகின்ற தீ காற்றின்
வேகத்தினால் வனபகுதியில் அதிகளவிலான தீ பரவுவதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சியினை மேற்கொண்டு வருவதோடு வனபகுதிக்கு தீயினை வைத்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடதக்கது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)