அரச ஊழியர்களின் விடுமுறை நாட்களை 45 இல் இருந்து 25 ஆக குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்ப்பதாக தொழிலாளர் போராட்ட மையம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உடனடியாக திருப்பிப் பெறுமாறு நிதியமைச்சிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுக்கப்படும் என மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை என்பது சலுகை என்று தெரிவித்த அவர், எவ்வித விசாரணையும் இன்றி விடுமுறையைக் குறைக்க முன்வருவது மக்களின் பணி உரிமையை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் கடுமையான தொழில் முறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.