நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பூமியில் அமைதியான முறையில் இடம்பெற்ற கண்டன போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்திருந்த ஆசிரியர்கள் குழுவை பொலிஸார் அப்புறப்படுத்த முயற்சித்தனர்.
மேலும் ஆசிரியர்கள் கட்டியிருந்த கூடாரத்தை போலீசார் அகற்றினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு, போலீசார் தங்களை தாக்கிஎதாகவும், செல்போன்களை பறித்துச் சென்றதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.இதேவேளை நேற்றைய தினம சாலையில் ஒரு நபரை தாக்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மாலுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் மருத்துவ சேவைகள் மற்றும் நலப்பிரிவு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக மாற்றப்பட்டுள்ளார்.



