போரினால் பாலஸ்தீனியர்களின் அவல நிலை!

0
5

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலால் காசாவில் 58,000 இற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

இதன் காரணமாக மயானங்கள் நிரம்பியுள்ளதால், உருக்குலைந்த நிலையிலேயே உடலங்களை அடக்கும் செய்யும் அவலம் காணப்படுவதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பல மயானங்கள் மூடப்பட்டுள்ளதால், உடலங்களை காலியாக உள்ள கட்டடங்களில் வைத்து அடக்கம் செய்து வருவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதற்கு மேல் துன்பங்களை அனுபவிக்க முடியாது எனவும், போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனவும் பாலஸ்தீனிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here