போரில் உயிரிழந்த தாய்க்கு 9 வயது உக்ரைன் சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்!

0
123

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்
இந்த நிலையில் போரில் உயிரிழந்த தனது தாய்க்கு 9 வயது சிறுமி ஒருவர் உருக்கமான எழுதிய கடிதத்தை உக்ரைன் உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது
அந்த கடிதத்தில் 9 வயது சிறுமி கூறியிருப்பதாவது: அம்மா நீங்கள் சொர்க்கத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த உலகிலேயே மிகச் சிறந்த தாய் நீங்கள்தான். விரைவில் சொர்க்கத்தில் நாம் சந்திப்போம்.

சொர்க்கத்திற்கு செல்லும் அளவிற்கு நான் இந்த உலகில் நல்ல பெண்ணாக வாழ்வேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். உக்ரைன் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த கடிதம் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here