போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை எனவும் நம்பகமான உள்நாட்டு பொறிமுறை ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மொழி மூல வினாக்களுக்கு பதில் வழங்கும் போது பிரதமர் ஹரிணி அமரசூர்ய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்கம் உடன்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச நடவடிக்கைகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்தும் எனவும் அதன் ஊடாக உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில் சர்வதேச விசாரணைகளை புறக்கணிப்பதாகவும் நம்பகமான உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறல் செயல்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் உறுதி எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
		
