போலி ஆவணங்களை பயன்படுத்தி நான்கு மாடுகளை ஏற்றிசென்ற இருவர் கைது…

0
181

போலி அனுமதி பத்திரத்தினைபயன்படுத்தி நோர்வூட் பகுதியில்இருந்து நான்கு மாடுகளைஏற்றிசென்ற இருவர் லாெறியுடன்கைது செய்யபட்டுள்ளதாக நோர்வூட்பொலிஸார் தெரிவித்தனர். இந்தசம்பவம் 08.09.2018.சனிகிழமைஇரவு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வுட் பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு போலி ஆவணங்களை தயாரித்து லாெறி ஒன்றில்ஏற்றிசென்ற நான்கு மாடுகளையும்குறித்த லாெறி வண்டியினையும்பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேலை நோர்வூட்பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யபட்டுள்ளதாேடு குறித்த லாெறி வண்டியினையும்மடக்கி பிடித்துள்ளதாக நோர்வூட்பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

குறித்த மாடுகளை ஏற்றி சென்ற சந்தேக நபர்கள் மாடுகளை ஏற்றிசெல்வதற்கான அனுமதிபத்திரங்களை போலியாக தயாரித்துள்ளதோடு மிருகவைத்தியரின் சான்றுதலும்போலியாக தயாரிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும்09.09.2018.ஞாயிற்றுகிழமை அட்டன்நீதவான் முன்னிலையில்ஆஜர்படுத்தபட உள்ளதாக நோர்வூட்பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரனைகளை நோர்வூட்பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here