மகளின் கண் முன்னே தாய் டெவோன் நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து மாயம்.பொலிஸார் பிரதேசவாசிகள் தேடுதல்.

0
214

மகளின் கண் முன்னே நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமாகியுள்ளதாக திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று 22 காலை 11.30 மணயளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மாயமானவர் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியை சேர்ந்த ஏ.நிசாந்தனி வயது 34 நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்;

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது குறித்த பெண்ணின் கணவரும் இரண்டு பிள்ளைகளும் கொழும்பில் வேலை செய்கின்ற நிலையில் இவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டு வந்ததாகவும் குறித்த நபர்; திருமணமாகாதவர் என பெண்ணிடம் தெரிவித்ததாகவும் குறித்த நபர் வேன் ஒன்றுக்கு தவணை பணம் செலுத்துவதற்காக ஒரு லட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாகவும் அந்த பணத்தினை கடனுக்காக பெற்றுக்கொண்டே அவருக்கு கொடுத்ததாகவும் இன்று அவரின் வீட்டுக்கு சென்ற போது அவர் திருமணமானவர் என்பது தெரிய வந்தாகவும்,குறித்த நபர் கொழும்புக்கு சென்று விட்டதாக தெரிவித்தாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாக இன்று காலை (22) முறைபாடு ஒன்றினை செய்துள்ளார்..

அதனை தொடர்ந்து குறித்த பெண் 17 வயது நிரம்பிய மகளுடன் நீர் வீழ்ச்சி பகுதிக்கு சென்று அமர்ந்து மகளிடம் தண்ணீர் வாங்கி வருமாறு தெரிவித்து விட்டு மகள் தண்ணீர் வாங்குவதற்கு செல்லும் போது தம்பியை பார்த்து கொள் என்று சத்தமிட்டு கை அசைத்தவாறு வீழ்ந்ததாக 17 வயது நிரம்பிய மகள் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தினை தொடந்தே பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து குறித்த பெண்ணை தேடி வருகின்றனர்.எனினும் இன்று மாலை வரை அவரை கண்டு பிடிக்கவில்லை.

குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதும் நடந்ததா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புல்ல பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here