2025 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணத் தொடர் செப்டம்பர் 30 தொடக்கம் நவம்பர் 02 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை மகளிர் அணியின் தலைவியாக சாமரி அத்தபத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறுமுனையில் பிரதி அணித்தலைவி பொறுப்பு அனுஷ்கா சஞ்சீவனியிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் இந்தியாவை செப்டம்பர் 30ஆம் திகதி எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
சாமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரட்ன, ஹர்சிதா சமரவிக்ரம, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி (பிரதி தலைவி), இமேஷா டுலானி, டேவ்மி விஹாங்கா, பியூமி வத்சலா, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதினி, மல்கி மாதரா, அச்சினி குலசூரிய