மகிந்த தேசப்பிரியவிற்கு புதிய பதவி

0
219

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலான குறித்த குழுவிற்கு நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் ஏனைய உறுப்பினர்களாக ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here