மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை

0
5

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, சந்தேக நபரை ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேக நபருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here