இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவிற்கு அழைக்கவுள்ளதாக இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எனது நண்பரும் இலங்கை தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை புதுடில்லியில் பொது நிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்காகவும், இந்து பௌத்த ஆலயங்களிற்கு விஜயம் மேற்கொள்வதற்காகவும் அழைக்கவுள்ளேன்.
அவர் மழைக்காலத்திற்கு முன்னர் ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வர முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்”, என அந்த பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே 9 ஆம் திகதி வன்முறை சம்பவம் இடம்பெற்ற போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென, அவர் டுவிட்டர் பதிவொன்றை இட்டிருந்தமையும், அந்த பதிவிற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.