ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு, விஷாலின் 35-வது திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்
படத்தை ஆர் பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் கப்பல் மற்றும் துறைமுகத்தை சார்ந்து உருவாக்கப்பட்ட கதைக்களமாகும்.
இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வெளியாகி உள்ள பர்ஸ்ட் லுக்கில் விஷால் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.