தேர்தலில் தோல்வி அடைந்த அரசியல்வாதிகளுக்கு கட்சி தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் வலியுறுத்தியுள்ளார்.
29 பேரடங்கிய தேசியப் பட்டியல் ஆசன வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களுக்கு இடமளிப்பதே ஏற்புடையதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘ மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அழைத்துவருவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. அது மக்கள் மத்தியில் கட்சிமீது அதிருப்தி அலையை உருவாக்கும்.
மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர்.
எனவே, தற்போதும் பழைய பாணியில் அரசியல் நடத்த முற்படக்கூடாது. தூய்மையான அரசியல் வேண்டுமெனில் மக்கள் நிராகரித்தவர்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக பதவி வழங்கப்படக்கூடாது.” – எனவும் லெட்சுமணன் சஞ்சய் வலியுறுத்தியுள்ளார்.
(தகவல் : நீலமேகம் பிரசாந்த்)