மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புத்தாண்டாக அமையட்டும்!

0
154

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசைதப் பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புத்தாண்டாக அமைய வாழ்த்தி வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
நாட்டில் கொரோனாவை விட கொடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் தினந்தோறும் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கொந்தளிப்பும் அதிகரித்து வருகின்றது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் உணவுப் பஞ்சம் வந்து விடுமோ என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது. எரிபொருட்களைப் பெற்றுக் கொள்ள வரிசையில் நின்று வாட வேண்டிய புதிய கலாசாரம் உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதை விட அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாட்டு மக்களை வெகுவாக வாட்டி வதைத்து வருகின்றது. புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், மாற்றத்தை விரும்பி மக்கள் குரல்கொடுத்து போராடத் தொடங்கியுள்ளார்கள். எனவே, மலரும் புத்தாண்டு மக்கள் நிம்மதியாக வாழவும், நாட்டில் பொருளாதாரம் செழிக்கவும் இனிதே அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here