மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்

0
135

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயி மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரையும் பாதுகாக்கும் முறைமையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தி பயிர் சேதத்தைக் குறைப்பதற்கும், வரவிருக்கும் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு நாட்டை தயார்படுத்துவதற்கும் அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க 06 தொழிற்சாலைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதில் இதுவரை 03 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

வீழ்ச்சியடைந்த நாட்டை அதிபர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளதால் அந்த நாடு இன்று மக்கள் வாழக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here