அக்கரப்பத்தனை பிரதேசத்தில் சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் அபிவிருத்திக்கு 7 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியை உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஒதுக்கியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொதுச்செயலாளருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நிதியை அமைச்சர் பைசர் முஸ்தபாவின்சென்ட் அமைச்சியூடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கதிர்செல்வன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பிரதேசத்தில் சபையில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை கொண்டு அக்கரப்பத்தனை புதிய பிரதேசசபைக்கான கழிவு குப்பைகளை சேகரிக்கும் வாகனம் மற்றும் காரியாலயத்திற்க்கு தேவையான தளவாடங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் என்பவனவும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேசசபைக்கு உட்பட்ட பொதுமக்களின் அடிப்படை வசதிகளுகக்கான அபிவிருத்தி பணிகள் இனங்காணப்பட்டு அதனை நிவர்த்திக்க இந்த நிதி பாரிய பங்களிப்பை தரும் எனவும் கட்சி மற்றும் இனவேறுபாடுகள் அற்ற வகையில் இந்த நிதிக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுப்பதே எமது இலக்காக அமைய வேண்டும்.
இதற்கு சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
அதேவேளையில் மக்கள் சபை உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் குறைகளை தெரிவிப்பதற்காக சபையின் பகுதியில் காரியாலயம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.
என தெரிவித்த அவர் மாதாந்த சபை நடவடிக்கையின் போது மாதாந்த சபை நடவடிக்கையின் போது உறுப்பினர்கள் கோரிக்கைகள் மற்றும் சபைக்கு கொண்டுவரும் பிரேரணைகள் தொடர்பில் முன்கூட்டியே பிரதேச சமையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .
இதன் மூலம் சபை நடவடிக்கைகளை முறையான வகையில் முன்னெடுக்க முடிவதோடு சபை குழப்பங்களை தவிர்த்து கொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்