மக்களுக்காக சேவைகள் முன்னெடுக்கும் போது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக மக்கள் பிரதிநிதிகளே அதனை எதிர்ப்பது மிகவும் கவலையளிப்பதாக தலவாக்கலையின் லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசன் தெரிவித்தார்.தலவாக்கலை நகரசபையில் இன்று (14) திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
இன்று கொரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி மிகவும் ஆபத்தான நிலையினை தோற்றுவித்துள்ளது இந்நிலையில் தலவாக்கலை பகுதியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவிவருகிறது. கொரோனா தொற்று காரணமாக பத்தனை தலவாக்லை சென்கிளையார் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று பேர் இறந்துள்ளதுடன் சென்கூம்ஸ் தேயிலை ஆராச்சி நிலையம், பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு எமது பிரதேச மக்களை காக்க வேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளன. ஆகவே நாங்கள் இந்த பிரதேசத்திற்கு முக்கியமாக காணப்படுகின்ற பிரதான வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டதற்கிணங்க அதில் கொரோனா சிகிச்சை பிரிவு ஒன்றினை ஏற்படுத்த ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.
இதற்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்காக நேற்று (13) சபையினை கூட்டிய போது ஆளும் கட்சியில் 03 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியில் 1 வரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் 01 வரும் மலையக மக்கள் முன்னணியில் 2 பேருமாக மொத்தம் ஏழு பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் போது மக்களின் வாக்குகளால் வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு எதிராக வாக்களிப்பது மிகவும் கவலையளிக்கிறது. இவ்வாறானவர்கள் தொடர்பாக மக்கள் எதிர்க்காலத்தில் சிறந்த பதில் அளிப்பார்கள் என அவர் இதன் போது தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்