மக்கள் பிரதிநிதிகள் மக்களின் மனமறிந்து வேலை செய்ய வேண்டுமே தவிற கட்சிபார்த்து வேலை செய்யக் கூடாது. நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவிப்பு.

0
152

மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் மக்களின் மனமறிந்து வேலை செய்ய வேண்டுமே தவிர அவர்கள் கட்சி பார்த்தோ தொழிற்சங்கம் பார்த்தோ வேலை செய்யக்கூடாது என நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018, 2019 காலப்பகுதியில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டின்சின் கர்கஸ்வோல்ட் நடுக்கணக்குப்பிரிவில் தோட்டத்தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட 35 வீடுகளின் சாவிகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் கே.கே.ரவியின் தலைமையில் இன்று (05) திகதி நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த வீடுகள் ஐந்து லட்சம் ரூபா அரசாங்கத்தின் மூலமும் மீதி ஐந்து லட்சம் ரூபா தொழிலாளர்களிடமிருந்து அறவிடும் முறையிலும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை வசதிகளான தண்ணீர் மின்சாரம், வீதி அபிவிருத்தி ஆகியன தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..

உங்களுக்கு தெரியும் நான் நோர்வூட் பிரதேச சபைக்கு தலைவராக வந்த பின் கட்சி பார்த்து தொழிற்சங்கம் பார்த்து வேலை செய்யவில்லை. எல்லோருக்கு பொதுவாக தான் வேலை செய்துவருகிறேன். யாரை கண்டாலும் எந்த கட்சி பாகுபாடின்றி வேலை செய்துவருகிறேன். இந்த வீடுகளை கொடுக்கும் போது கூட பெயர் பட்டியியலில் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்கள். நானும் ஜீவன் தொண்டமான் அவர்களும் அதனை எதிர்த்தோம் யார் யார் பெயர்கள் இருக்கின்றதோ அவர்கள் அனைவருக்கும் இன்று வீடுகளின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் கடந்த அரசாங்கத்தினால் கட்டப்பட்ட வீடுகள் யார் கட்டினாலும் பரவாயில்லை. எங்களது நோக்கம் எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் பயன்பெற வேண்டும் என்பதுதான்.

எதிர்காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைகள் இப்பிரதேசத்தில் செய்ய வேண்டியுள்ளது. அதனை நாங்கள் எவ்வித பாகுபாடின்றி செய்வோம். நீங்கள் அதற்காக கட்சி மாற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எந்த கட்சியில் எந்த தொழிற்சங்கத்தில் இருக்கின்றீர்களோ? அந்த கட்சியில் தொழிற்சங்கத்தில் இருங்கள் ஆனால் ஒற்றுமையாக இருங்கள் அதே நேரம் உங்களுக்கு எல்லோருக்கும் தெரியும் இன்று நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது ஆகவே நீங்கள் செல்லும் இடங்கள் வேலை செய்யும் போது சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டி உள்ளதோடு உங்கள் பிள்ளைகளுக்கும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில் சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற குறித்த நிகழ்வுக்கு தோட்ட நிர்வாகத்தின் சார்பில் முகாமையாளர், உதவி முகாமையாளரகள், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here