புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு சவுதியில் அமைந்துள்ள மக்காவிற்கு யாத்திரை சென்ற இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததுடன், அவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய நபர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததுடன், அவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.