மட்டக்களப்பில் ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

0
131

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்தின் துருசில் இருந்து குளத்தில் ஆசிரியர் ஒருவர் மற்றும் 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
களூவுந்தன்வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

களூவுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கா.போ.த.சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவர்களும் ஆசியரியருமாக 8 பேர் சம்பவதினமான இன்று காலை ஒன்றிணைந்து தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இவர்கள் அந்த பகுதியிலுள்ள சிறிய குளமான 40 வட்டை குளத்தின் தோனியில் சென்ற பொது கவிந்து 3 மாணவர்களும் ஆசிரியரும் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here