மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழப்பு

0
132

மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) வயதுடைய சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (48) வயதுடைய சோமசுந்தரம் துரைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த வாரம் சட்ட விரோதமான முறையில் கசிப்பு சாராயம் உற்பத்தியில் ஈடுபட்டு விற்பனை செய்து வந்த நிலையில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபருக்கு கடந்த (28) அன்று ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போளின் உத்தரவிற்கு அமைவாக சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பாவையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது சடலத்தில் உடலின் உட்பகுதியில் காயங்கள் காணப்பட்டதனையடுத்து சம்பவம் பற்றி திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸாரின் ஊடக நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருனை தந்த நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல், சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here