மட்டக்களப்பு பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ள பொலிஸ் தலைமையகம்

0
265

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்து வியாழக்கிழமை (09) துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அண்மைகாலமாக பகலிலும் இரவிலும் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் நீங்கள் உங்களுடைய உடமைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது உங்களுடைய பொறுப்பாகும்.

எனவே பொதுமக்கள் துவிச்சக்கரவண்டி, மோட்டர்சைக்கிள், முச்சக்கரவண்டி, கார். வான்களை பூட்டி திறப்புக்களை பாதுகாப்பாக வைத்துகொள்வதுடன், தங்க ஆபரணங்கள், பணம், ஆவணங்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

அதேவேளை தாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டைநன்றாக பூட்டி திறப்பினை கொண்டு செல்லவும் அதைவிடுத்து திறப்பை பூச்சாடியின் கீழே, கால்துடைப்பான் கீழே வைப்பதை தவிர்ப்பதுடன் சிறுபிள்ளைகளை தனிமைப்படுத்தி வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்,

சிறுவர்களுக்கு இதியாதவர்கள் இனிப்பு பண்டம் வழங்கினால் அதை வாங்கி உண்ணவேண்டாம் என பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதுடன் வீட்டிற்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வருவதற்கு அனுமதிக்கவேண்டாம் .

அதேவேளை யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக கூறிவரும் நபர்கள் மீது கவனமாக இருக்கவும். வெளியில் வாகனம் நிறுத்த தேவை ஏற்பட்டால் சிசிரி கமரா பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்தவும்.

சந்தேகத்துக்கு இடமாக நபர்கள் நடமாடினால் உடன் 119 அவசரசேவை அல்லது 0718591130 பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது 065 2224422 பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைகத்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளதாக அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here