மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரத்தை மீறி மணல் ஏற்றி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயக்க தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரும் உழவு இயந்திரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.