மட்டு வாவியில் மக்களை அச்சுறுத்திய முதலை உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியது!

0
130

மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் சனிக்கிழமை (28) கரையோதுங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 15 அடி நீளமுடைய இந்த ராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here