மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்.

0
159

மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக 22.03.2022 அன்று காலை முதல் அட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மின்வெட்டு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு மண்ணெண்ணெய் எடுத்துச் செல்வதாக அட்டன் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணெண்ணெய் பெற வந்த வாடிக்கையாளர்களுக்கு 05 லீற்றர் மாத்திரமே வழங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருந்து மண்ணெண்ணெய் வாங்க பிரதான வீதியின் ஓரத்தில் நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here