கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்தொன்று மதவாச்சி பிரதான வீதி, பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முருங்கன், ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் பயணித்த சாரதி உட்பட எட்டு ஆண்களும் இரண்டு பெண்களும் மன்னார் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் உடல் செட்டிகுளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Image – Meta AI