மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளா; ஆதாரமற்ற வதந்தி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்!!

0
160

வறுமை காரணமாக மாணவர் ஒருவர், மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளை உட்கொண்ட சம்பவம் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தைக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவ ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

அதன்படி உதவியினை பெற 0114354647 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், தரம்-9 இல் கல்வி பயிலும் மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்து உட்கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here