ஓவ்வொறு தோட்டபுறங்களிலும் உள்ள இளைஞர்களுக்கு மதுபானங்களை பணத்தினையும் வழங்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கபடுகின்ற தேர்தல் பிரச்சாரத்தினை ஒரு சிலர் குழப்ப முயலுவதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவிவித்தார்.
23.01.2018.பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆறுமுகன் தொண்டமான் கலந்து கொண்டபோது ஒரு சிலரால் அவருக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் அவர் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளர் உட்பட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுறை மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் உரையாற்றிய பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மாற்றுகட்சி காரர்களுக்கு மக்கள் மத்தியில் பேசுவற்கு எதுவும் இல்லை அவர்கள் எங்ககு சென்றாலும் என்னை பற்றிமட்டும் தான் விமர்சித்து வருவதாக கூறினார் .
மலையகத்தில் தற்பொழுது முன்னெடுக்கபடுகின்ற விடமைப்பு திட்டத்தனை பொறுப்பேட்கும் ஒப்பந்தகாரர் முன்பு தனியாக 30,40,வீடுகளை அமைப்பார்கள் ஆனால் தற்போது வீடமைப்பு திட்டத்தினை பொறுப்பேட்கும் ஒப்பந்தகாரர் ஒரு வீட்டினை அமைப்பதற்கு நான்கு பேர் தேவை படுகின்றனர் இதில் தூண் நாட்டுவதற்கு ஒருவர், அடிதளம் இடுவதற்கு ஒருவர், கூரை அமைப்பதற்கு ஒருவர் இவ்வாறு விடமைப்பு திட்டங்களை முன்னெடுக்கின்றனர், மக்கள் அங்கு குடியேறிய பின்னர் தான் சுவர் வேலை நடக்கிறது.
ஆக மொத்தத்தில் எமது மக்களை அடகுவைத்து விட்டார்கள் நல்லாட்சி பிறந்தவுடன் தேன்ஆறு ஓடும் பால்ஆறுஓடுமென கூறினார்கள் ஆனால் தேன் ஆறும் ஓடவில்லை பால்ஆறும் ஓடவில்லை மக்களால் சிறுகை சிறுகையாக சேர்த்து வைக்கபட்ட பொருட்கள் நகைகடைகளுக்கு செல்லும் ஆறாக மாறியிருப்பதாக தெரிவித்தார்.
எனவே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகான வேண்டுமானால் இம் முறை இடம் பெறவிருக்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் சிந்திந்து வாக்களியுங்கள் பெப்ரவரி 10ம் திகதிக்கு பிறகு ஒரு மாற்றம் ஏற்படுமெனவும் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர்: எஸ்.சதீஸ்