மதுபானம் மற்றும் பீர் விலை அதிகரிப்பு!

0
269

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பீர் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.

அரசாங்கத்தால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரக்கு மற்றும் பீர் மீதான வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here