மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஸ்வலிங்க தம்பிரான் வில்லங்க புகார்!

0
34

நித்யானந்தா என்றைக்கு அடியெடுத்து வைத்தாரோ அன்று முதலே மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீன மடத்துக்குள் சர்ச்சைகள் சம்மணம் போட்டு உட்கார ஆரம்பித்துவிட்டன. அந்த விதத்​தில் இப்​போது, மடத்​தில் தம்​பி​ரான் பட்​டமேற்ற விஸ்​வலிங்க தம்​பி​ரான் மாவட்ட ஆட்​சி​யரிடம் மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக பிராது கொடுத்த விவ​காரம் பெரும் சர்ச்​சை​யாகி வரு​கிறது.

மதுரை ஆதீன மடத்​திற்கு இளைய ஆதீன​மாக இன்​னொரு​வ​ருக்கு பட்​டம் சூட்​டு​வதை தடுக்க வேண்​டும் எனவும், தகு​தி​யான தன்​னையே இளைய ஆதீன​மாக நியமிக்க வேண்​டும் எனவும் தனது புகாரில் தெரி​வித்​துள்ள விஸ்​வலிங்க தம்​பி​ரான், இந்​தக் கோரிக்​கையை வலி​யுறுத்​தி, முக்தி அடைந்த ஆதீனம் அருணகிரி​நாதரின் சமா​தி​யில் அமர்ந்து தர்ணா போராட்​டத்​தி​லும் ஈடு​பட்டு கவனம் ஈர்த்​தார்.

மதுரை ஆதீனம் அருணகிரி​நாதர் மறைவை அடுத்​து, 293-வது ஆதீன​மாக ஆகஸ்ட் 2023-ல் ஹரிஹர ஞானசம்​பந்த தேசிக சுவாமிகள் பொறுப்​பேற்​றார். இவருக்கு விஸ்​வலிங்க தம்​பி​ரான் பணி​விடைகள் செய்து வந்​தார். இந்​நிலை​யில், இவர்​களுக்​குள் பிரச்​சினை வெடித்ததால் விஸ்​வலிங்க தம்​பி​ரான் சில கால​மாக ஆதீன மடத்​துக்கு வெளி​யில் இருக்​கி​றார். இதற்​கிடை​யில் தான், தன்னை விட்டு விட்டு இன்​னொரு​வரை இளைய மடாதிப​தி​யாக நியமிக்க மதுரை ஆதீனம் முயற்சி செய்​வ​தாக ஆட்​சி​யருக்​கும் அறநிலை​யத் துறை அமைச்​சருக்​கும் புகார்​களை அனுப்பி இருக்​கி​றார் விஸ்​வலிங்க தம்​பி​ரான்.

“மறைந்த ஆதீனம் அருணகிரி​நாதரிடம் 2018-லேயே தீட்சை பெற்ற தான் தான் இளைய ஆதீன​மாக பொறுப்​பேற்க வேண்​டும். இதை இப்​போதுள்ள ஆதீனத்​திடம் அருணகிரி​நாதர் முன்​கூட்​டியே தெளிவுபடுத்​திச் சென்​றிருந்​தும் அதையெல்​லாம் மீறி இன்​னொரு​வரை இளைய பட்​டத்​துக்கு கொண்டுவர முயற்​சிக்​கி​றார்” என்று சொல்​லும் விஸ்​வலிங்க தம்​பி​ரான், “சைவ வேளாளர், சைவ முதலி​யார், கார்​காத்த வேளாளர் ஆகிய மூன்று பிரிவினர் மதுரை ஆதீனம் ஆகலாம் என உள்​ளது. நான் கார்​காத்த வேளாளர் சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவன். தற்​போதுள்ள ஆதீனம் சைவ வேளாளர் சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர் என்​ப​தால் தனது சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவரை இளைய ஆதீன​மாக கொண்​டுவர முயற்​சிக்​கி​றார்.

நான் திரு​மண​மாகி விவ​காரத்து ஆனவன் என்​ப​தால் என்னை இளைய ஆதீன​மாக கொண்டு வர மறுக்​கி​றார் ஆதீனம். ஆனால், அவர் இளைய ஆதீ​னமாக கொண்​டுவர நினைக்​கும் அவரது சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவ​ரும் என்​னைப் போலவே விவ​காரத்து ஆனவர் தான். நான் விவ​காரத்து ஆனவன் என்று தெரிந்தே தான் அருணகிரி​நாதர் எனக்கு தீட்​சையளித்​தார்.

தனக்கு முந்​தைய ஆதீன​மும் திருமண வாழ்க்​கை​யில் இருந்து விவ​காரத்து ஆனவர் தான் எனவும் அருணகிரி​நாதர் என்​னிடம் சொல்லி இருக்​கி​றார். அருணகிரி​நாதரை நான் கண்​ணும் கருத்​து​மாக கவனித்​துக் கொண்​டேன். அதெல்​லாம் இப்​போதுள்ள ஆதீனத்​துக்​குப் பிடிக்​காத​தால் இப்​போது என்னை இளைய ஆதீன​மாக வரவி​டா​மல் தடுக்​கி​றார்.

இப்போதுள்ள ஆதீனம் மதுரை ஆதீன மரபு​களை மீறி செயல்​படு​கி​றார். தேவை​யில்​லாமல் அரசி​யல் பேசி​ய​தால் இப்​போது மதுரை ஆதீன மடத்​துக்​குள் போலீ​ஸார் நுழைந்து விசா​ரணை நடத்​திக் கொண்​டிருக்​கி​றார்​கள். ஆதீனம் நீதி​மன்ற படியேறி முன்​ஜாமீன் பெற்​றதெல்​லாம் ஆதீன மரபு​களுக்கு எதி​ரானது.

ஆதீனத்​தின் பணி சைவத்​தை​யும் தமி​ழை​யும் வளர்ப்​பதும், அரசாங்​கத்தை ஆசிர்​வாதம் செய்​வதும்​தான். ஆனால், இதைத் தவிர மற்ற வேலை​களை எல்​லாம் செய்து வரு​கி​றார். ஆதீன மடத்​தில் தம்​பி​ரான், ஒடுக்​கம் தம்​பி​ரா​னாக இருப்​பவர்​கள் மட்​டுமே இளைய ஆதீன​மாக வரத் தகு​தி​யான​வர்​கள். அந்​தத் தகுதி எனக்கு உள்​ளது” என்​றார்.

இது விஷய​மாக நாம் மதுரை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விளக்​கம் கேட்​ட​போது விஷ​யத்​தைக் கேட்​ட​வர், “இது விஷயமா நான் பிறகு பேசுகிறேன்” என்று சொல்​லி​விட்டு இணைப்​பைத் துண்​டித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here