இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து சாரதி ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக நுவரெலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடையிலிருந்து நுவரெலியா வழியாக பேருந்து இயக்கப்பட்டபோது, அதை நிறுத்தி, காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.இதன்போது சாரதி அதிக அளவில் மது அருந்தி உள்ளமையை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்துள்ளனர். இதையடுத்து அவர் காவலில் வைக்கப்பட்டார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பேருந்து நுவரெலியா காவல் நிலையத்திற்கு கண்காணிப்பிற்காக கொண்டு செல்லப்பட்டது, அப்போது அதிகாரிகள் சாரதியின் இருக்கைக்குப் பின்னால் மதுபானம் அடங்கிய கேனைக் கண்டுபிடித்துள்ளனர்.
குடிநீர் போத்தலில் அது வைக்கப்பட்டுள்ளதாகவும் பயணத்தின் போது சாரதி மது அருந்தியிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், பயணிகள் பாதுகாப்பாக தங்கள் இடத்தை நோக்கிச் செல்வதை உறுதி செய்வதற்காக மற்றொரு சாரதியின் சேவை பெறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.