20 வயதுக்கு உட்பட்ட மத்தியமாகாண கபடி போட்டியில் பூண்டு தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தை சுவீகரித்துள்ளனர்.மத்தியமாகாணத்தில் காணப்படும் பல பாடசாலைகள் பங்கு கொண்ட 20 வயதுக்கு உட்பட்ட கபடி போட்டியில் பூண்டுலோயா தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த ஆண்கள் குழாமினரும்,பெண்கள் குழாமினரும் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை பெற்றுள்ளனர்.
ஆசிரியர் சுதர்ஷனின் பயற்சியின் ஊடாக சென்ற குறித்த பாடசாலை மாணவர்கள் வெற்றியீட்டியுள்ளதோடு தொடர்சியாக நான்காவது முறையும் மத்தியமாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்