மத்திய மாகாணத்தில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த 2020 ஆண்டு பெறுபேறுகளின் தரப்படுத்தலில் மத்திய மாகாணத்தில் ஆறாம் இடத்தினை ஹட்டன் கல்வி வலயம் பெற்றுக்கொண்டுள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
மத்திய மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களில் ஒவ்வொரு தேசிய மட்ட பரீட்சைக்கும் அதிகூடிய மாணவர்களை எமது வலயம் அனுப்புகிறது. இந்த வலயத்தில் கடந்த சில வருடகாலமாக கல்வி பாரிய அளவில் வளர்ச்சியினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது கடந்த வருடம் மத்திய மாகாண தரப்படுத்தலில் 65.55 சதவீதத்தினை நாம் பெற்றிருந்தோம் இந்த வருடம் 73.46 சதவீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளோம் இந்த வெற்றிக்கு அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஹட்டன் வலய பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் பெற்றோர்கள்,அரசசார்பற்றி நிறுவனங்கள், என அனைவரும் ஒத்துழைத்துள்ளனர் அந்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை மத்திய மாகா கல்வி தரப்படுத்தலில் கடந்த வருடம் 2020 84.19 சதவீதத்தினை பெற்று கண்டி கல்வி வலயம் முதலாம் இடத்தினையும்,76.09 சதவீதத்தினை பெற்று வலப்பனை, தெனுவர 76.48, கொத்மலை 75.74, சதவீதத்தினையும், தெல்தெனிய 74.8 ஹட்டன் கல்வி வலயம் 73.46, கட்டுகஸ்தோட்ட 72.98, மாத்தளை 72.71 ஹங்குரங்கெத்த 72.12, வில்கமுவ.71.95, வத்தேகம 71.41 கம்பளை 20.94 நுவரெலியா 69.28, கவேவலை, 68.71 இந்த கல்வி வலயம் பெற்றுக்கொண்ட சதவீதத்திற்கமைவாக மத்திய மாகாணம் 74.67 சதவீதத்தினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்.