மத்திய மலை நாட்டில் நேற்று இரவு தொடக்கும் கடும் மழை பெய்து வருகிறது நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன.
வட்டவளை ரொசல்ல பகுதியில் பெய்க கடும் மழையினால் ஹைட்ரி பகுதியில் உள்ள ஆறு பெருக்கடுத்து குறித்த தோட்டப்பகுதியில் உள்ள 35 வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளன.
வெள்ளம் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பல குடும்பங்களின் உடைமைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 65 பேர் ஹைட்ரி விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கிராம சேவகர் ஊடாக அம்பகமுவ இடர் முகாமையத்துவ நிலையத்தினால் ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன எனவே இந்த வீதிகளில் பயணஞ் செய்யும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே நேரம் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரவு அபாயம் ஏற்பட்டுள்ளன.ஆகவே மலைகளுக்கு மண் மேடுகளுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டமும் மிகவும் உயர்ந்துள்ளன.இதனால் நீர் நிலைகளுக்கு சமீபமாக இருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலைவாஞ்ஞன்