மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர் தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 34.4 கன அடியாக குறைவடைந்துள்ளதாக நீர் தேக்க பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வான்பாயும் மட்டத்தை விட குறைவு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் அந்த பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்த போதும் அது நீர் நிறைய போதுமானதாக இல்லை என பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொடரும் இந்த நிலைமையால் காசல்ரீ நீர்தேக்கத்தில் இருந்து நீரை பெறும் விமல சுரேந்திர, லக்ஸபான மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர் தேக்கங்களில் நீர் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளது.
இதன் தாக்கத்தால் களனி கங்கையின் நீர்மட்டமும் குறைவடையும் அபாயத்தை எதிர்க்கொண்டுள்ளதாகவும்; இதனால் அந்த கங்கையின் நீரை குடிப்பதற்காக பயன்படுத்துவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்து வருவதால் நீர் நிலைகளின் அடிப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் படிப்படியாக வெளிப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறு நீர் நிலைகள் வற்ற தொடங்கியுள்ளதால் வெற்று இடத்தில் சிறுவர்கள் விளையாடி வருவதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
க.கிஷாந்தன்