மத்திய மாகாணத்தில் ஓமிக்ரோன் பரவல் வீதமும் மூன்றாம் தடுப்பூசியின் முக்கியத்துவமும்…

0
243

மத்திய மாகாண கோவிட் 19 தடுப்பு செயலணி கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர் மேதகு லலித் யூ கமகே அவர்கள் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

கொரோனா நோய்தொற்று மத்திய மாகாணத்தில் பரவும் வீதம் குறைவடைந்து இருந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக ஓமிக்ரோன் வகை நோய் தொற்று பரவும் ஆபத்து அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார். விசேடமாக நுவரெலியா மாவட்டம் கண்டி மாவட்டம் மாத்தளை மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது மேலும் சிவனொளி பாதைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 6 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஓமிக்ரோன் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் இதுதொடர்பாக சரியான விழிப்புணர்வையும் மூன்றாவது தடுப்பூசி பெறுவதற்கான அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்துவதன் முக்கியத்துவத்தையும் இதன்போது பணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

பாடசாலைகளில் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் மூன்றாவது தடுப்பூசி பெறுவதன் அவசியம் தொடர்பாகவும் மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் மூலமாகவே ஓமிக்ரோன் தொட்டிலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி பெருந்தோட்ட பகுதிகளில் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளை அண்டியுள்ள கிராம பகுதிகளில் முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை பெறுவதற்கு மக்கள் காட்டிய ஆர்வம் மூன்றாம் தடுப்பூசியை பெறுவதில் குறைந்து அடைந்துள்ளதாகவும் சமூகத்தில் மூன்றாவது தடுப்பூசி தொடர்பாக தவறான புரிதல் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புதல் என்பன அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் பாடசாலைகள் மூலமாகவும் தமிழில் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுதொடர்பான விழிப்புணர்வை உடன் செய்ய வேண்டுமெனவும். இரண்டு நாட்களுக்கு முன்பாக மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுடன் சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களை சந்தித்தபோது இதனை அவர்கள் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். மேலும் எமது பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் அதிகாரிகள் பிரஜா தன்னார்வ படையணி மூலமாக பெருந்தோட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தடுப்பூசி வழங்குவதற்கான செயல்முறைகளை நாம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கலில் மாத்தளை மாவட்டம் கண்டி மாவட்டம் மாவட்டம் நுவரெலியா மாவட்டம் என்பன சிறந்த பெறுபேற்றை காட்டுவதாகவும் உலக தரப்படுத்தலில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பது நமது நாட்டிற்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முயற்சிக்கும் பெறுபேறு யாகும் எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களைப் பாதுகாக்க செயல்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகள் ஊடாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகவும் ஊடகங்களைப் பயன்படுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை உடன் அமல்படுத்த இச்செயல் அணி கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் மத்திய மாகாண பிரதம செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் மாவட்ட வைத்திய அதிகாரிகள் மத்திய மாகாண இராணுவ தளபதி மத்திய மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் என் போர் கலந்து கொண்டிருந்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here